• Jan 13 2026

தியேட்டரில் காத்துவாங்கும் "பராசக்தி"... மொத்தமா ஊத்திக்கிச்சு போலயே.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படங்கள் பொதுவாக வெற்றிப் படைப்பாக விளங்குவதில் முன்னணி வகித்துள்ளன. அதே போல், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் ‘பராசக்தி’ பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. 

‘பராசக்தி’ திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.படம் சமூக அரசியல் பின்னணி மற்றும் குடும்ப உறவுகளின் வலிமையை மையமாகக் கொண்டுள்ளது.


சிவகார்த்திகேயனின் நடிப்பு, ரசிகர்களின் மனதை வெல்லும் வகையில் இருந்ததுடன், படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது. பொங்கல் விழா வெளியீடாக ஜனவரி 10-ந்தேதி திரையரங்குகளில் வெளிவந்த பராசக்தி திரைப்படம், முதல்நாள் 12.5 கோடி ரூபாய் வசூலித்து ப்ளாக்பஸ்டர் தொடக்கத்தை கண்டது.

இது பொங்கல் காலத்திற்கு ஏற்ற ஒரு அசாதாரண தொடக்கம் என விமர்சகர்கள் மதிப்பிட்டனர். திரையரங்குகளில் மக்கள் திரண்டு, படத்தின் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.

இரண்டாவது நாளான ஜனவரி 11-ஆம் தேதி, படத்தின் வசூல் 10.1 கோடி ரூபாய் வரை உயர்ந்தது. மூன்றாவது நாளான ஜனவரி 12, இந்தியாவில் படத்தின் வசூல் 2.75 கோடி ரூபாய் வரை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மூன்று நாட்களில் மொத்த வசூல் 25.35 கோடி ரூபாய் என்ற முக்கிய சாதனை படைத்துள்ளது என Sacnilk நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு, உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் படத்தின் வசூல் 51 கோடி ரூபாய் அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. எனினும் இது சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சுமாரான வெற்றி எனவே ரசிகர்கள் கருதுகின்றனர். 

Advertisement

Advertisement