தமிழ் திரையுலகில் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘ஜன நாயகன்’, தற்போது ரிலீஸ் தடை காரணமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், தணிக்கை சான்றிதழ் பெறாமையால் வெளியீடு தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்துப் திட்டங்களும் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளன.

‘ஜன நாயகன்’ படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளதற்கான காரணங்கள் குறித்து படக்குழுவினர் அதிக தகவலை வெளியிடவில்லை. இருப்பினும், படம் தொடர்பான சில காட்சிகள் மற்றும் கதைக்களப் பகுதிகள் சென்சார் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர், திரைப்படத்தை பொங்கல் சீசனுக்குள் வெளியிடுவதற்கான முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர், ஆனால் சான்றிதழ் இல்லாத காரணத்தால் திட்டமிட்ட வெளியீடு தடைபட்டது.
‘ஜன நாயகன்’ படம் ரசிகர்களிடையே அதிகளவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை கருத்தில் கொண்டு, தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தற்பொழுது மேல்முறையீடு செய்துள்ளது. தகவல்களின் படி, அடுத்த சில நாட்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!