தமிழ் சினிமா மற்றும் டிவி உலகில் புகழ்பெற்றவரான ஜூலி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார். ஜூலி,பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகியதுடன், அதன் பிறகு பல டிவி நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், ஜூலி மற்றும் முகமது இக்ரீம் தங்கள் தனிப்பட்ட வாழ்கையில் ஒரு முக்கிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் நிச்சயதார்த்தம் (Engagement) செய்து, திருமணத்திற்கான வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயதார்த்தத்தின் பின்னர், ஜூலி மற்றும் இக்ரீம் திருமண அழைப்பிதழ்களை வழங்கும் பணியில் முழு ஈடுபாட்டுடன் உள்ளனர். இவர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டு, ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளனர்.
சமீபத்தில் ஜூலி, அவர்களுக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர் சிம்புவுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த தருணத்தை, வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.
#julie invites #Simbu #STR for her wedding pic.twitter.com/xvVDF8rKTM
Listen News!