தமிழ் சினிமாவில் கிராமிய கலாச்சாரம், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் மண் வாசனை கொண்ட கதைகளை மையமாகக் கொண்ட படங்கள் எப்போதும் தனி கவனம் பெறும். அந்த வகையில், மதுரையில் நடைபெறும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஜாக்கி’.
யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், வருகிற 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘ஜாக்கி’ திரைப்படம், மதுரை மாவட்டத்தின் கிராமிய சூழல், மக்களின் வாழ்வியல், வீர விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. குறிப்பாக, தற்போது அரிதாக பார்க்கப்படும் கெடா சண்டை எனும் பாரம்பரிய விளையாட்டை திரை வடிவில் கொண்டு வருவது இப்படத்தின் முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், ‘ஜாக்கி’ திரைப்படத்திலிருந்து செகண்ட் சிங்கிளான ‘அலங்காரி’ என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலை சத்ய பிரகாஷ் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!