விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்ச கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் சந்தித்த இந்த சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனின் முக்கியமான அம்சமாக, ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் பழைய பிரச்சனைகள், நட்பு, பகை, உணர்ச்சிகள் என அனைத்தும் மீண்டும் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
பல வாரங்களாக நடந்த கடுமையான போட்டிகள், டாஸ்க்கள் மற்றும் எலிமினேஷன்களைக் கடந்து, தற்போது பிக் பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னர் ஆக மாறுவதற்கான போட்டியில் நான்கு பேர் மட்டுமே மீதமுள்ளனர். அதாவது, சபரி, அரோரா, விக்ரம் மற்றும் திவ்யா ஆகியோரே காணப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்ததாக அமைந்தது. அதாவது, இந்த நிகழ்ச்சியிலிருந்து சான்ட்ரா வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, சான்ட்ராவின் குழந்தைகள் அதனைக் கொண்டாடிய தருணம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீட்டிற்கு திரும்பிய சான்ட்ராவை அவரது குழந்தைகள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் வகையில், குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி celebration செய்துள்ளார் சான்ட்ரா.
Listen News!