பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் வழக்கமாக 6 போட்டியாளர்கள் எஞ்சி இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவர் தான் மிட் வீக் எவிக்சனில் வெளியேறுவார். மீதம் உள்ள ஐந்து போட்டியாளர்களும் இறுதிச்சுற்றுக்கு வருவார்கள்.
ஆனால் இந்த சீசனில் சற்று வித்தியாசமாக நான்கு போட்டியாளர்கள் தான் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். வழக்கமாக 5 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு வந்து அவர்களின் ஐந்தாவது, நான்காவது இடம் வரிசையாக அறிவிக்கப்பட்டு இறுதியில் வின்னர் அறிவிக்கப்படுவார்.
கடந்த வாரம் இறுதியாக சான்ட்ரா எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். தற்போது பிக் பாஸ் வீட்டில் சபரி, விக்ரம், அரோரா மற்றும் திவ்யா ஆகியோர் காணப்படுகின்றனர். மேலும் தற்போது பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் கெஸ்ட் ஆக வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னருக்காக போட்டி போடும் போட்டியாளர்களுக்கு வோட் கேட்டு அழைப்பை ஏற்படுத்துமாறு நம்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் அதில் அரோராவின் போன் நம்பரை தவிர ஏனைய போட்டியாளர்களின் போன் நம்பர்கள் வேலை செய்யவில்லை. எனவே இது அரோராவை டைட்டில் வின்னர் ஆக்குவதற்குரிய சதித்தான். அதற்காகத்தான் விஜய் டிவி இப்படி செய்கின்றது என சேனல் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதே நேரம், இன்னொரு பக்கம் வழமையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எ. ஆர். எம் ஆகிய இந்த மூன்று ஆங்கில எழுத்துக்களின் பெயர் வரிசையில் வருபவர்கள் தான் டைட்டில் வாங்கி இருக்கின்றார்கள்.
அதன்படி பார்த்தால் இந்த நான்கு போட்டியாளர்களில் அரோரா மட்டும் தான் எ எழுத்தை கொண்டுள்ளார். அவர் தற்போது பாசிட்டிவையும் சம்பாதித்துள்ளார். எனவே அவர் நிச்சயமாக டைட்டில் வெல்வார் என்ற விவகாரமும் பேசப்படுகிறது.
இதுவரை இடம் பெற்ற பிக் பாஸ் சீசன்களின் படி ஆரவ், ரித்விகா, முகேன், ஆரி, ராஜு, முகமது அசீம், அர்ச்சனா, முத்துக்குமரன் என முந்தைய போட்டியாளர்களின் பெயர்களை பார்க்கும் போது அரோரா டைட்டில் வின் பண்ணலாம் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
Listen News!