பிக் பாஸ் 9வது சீசன் நிறைவடைவதற்கு ஒரு சில நாட்களே காணப்படுகிறது. இதில் தற்போது சபரி, அரோரா, திவ்யா மற்றும் விக்ரம் ஆகியோர்கள் காணப்படுகின்றனர். இந்த நால்வரில் திவ்யாவுக்கு டைட்டில் வின் பண்ணுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.
பிக் பாஸ் வீட்டில் தற்போது பழைய போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளனர். இறுதியாக சான்ட்ரா எலிமினேட் ஆகி சென்றிருந்தார். அவர் போவதற்கு முன்பு பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வியானா, ரம்யா ஆகியோர்கள் அவரை வச்சு செய்திருந்தனர்.
இதை தொடர்ந்து தற்போது அமித், பிரஜின், துஷார் ஆகியோர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.. மேலும் கலையரசன் பிரஜின் வெளியில் கமருதீன் கூட பேசியதையும் உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் திவ்யா பிரஜின் ஆகியோர் தோளுக்கு மேல் கை போட்டு பேசிய காட்சிகள் வைரலானது. மேலும் இதன்போது சான்ட்ரா பற்றியும் பேசிய உள்ளார்கள்.
அதன்படி சான்ட்ராவுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை என்று பிரஜின் கேட்டதற்கு, திவ்யா அவரிடமே அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார். மேலும் அவர் பற்றி ரம்யாவும் வியானாவும் புறம் பேசியதாகவும், அதனை வீட்டிற்கு போய் எபிசோட்டில் பார்க்குமாறும் பிரஜின் சொல்லியுள்ளார்.
ஆனால் இதை கேட்ட திவ்யா, அவர்களை இப்போதே அழைக்குமாறும், நேருக்கு நேராகவே அவர்களிடம் கேள்வி கேட்பதாகவும் கூறியுள்ளார். தற்போது திவ்யாவின் தெளிவான புரிதலும் பேச்சும் டைட்டில் வின்னர் ஆவதற்கு கூட அதிக அளவில் சான்ஸ் உள்ளது என பேசப்படுகிறது.
Listen News!