• Jan 13 2026

வேறலெவல் கெமிஸ்ட்ரி.! கணவருடன் ரொமான்டிக்கா போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா

subiththira / 23 hours ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் மட்டுமல்லாமல், ஹாலிவுட்டிலும் தனது தனித்துவமான திறமையால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு சர்வதேச நட்சத்திரமாக திகழ்கிறார். 

நடிகை, பாடகி, தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட பிரியங்கா சோப்ரா, சினிமாவைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.


மாடலிங் துறையில் கால்பதித்த பிரியங்கா சோப்ரா, மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து, பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகி, பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் ஹாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம், இந்திய சினிமாவை உலக மேடைக்கு கொண்டு சென்ற நடிகைகளில் ஒருவராக மாறினார்.

பிரியங்கா சோப்ரா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். Instagram, X (Twitter), Facebook போன்ற தளங்களில் அவர் பகிரும் ஒவ்வொரு பதிவும் சில நிமிடங்களில் வைரலாகி விடுகிறது. குறிப்பாக, அவர் பகிரும் ஸ்டைலிஷ், கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவது வழக்கமாகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement