இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிது குமார் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய “தி ராஜா சாப்” திரைப்படம் 2026 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் ஹாரர் மற்றும் காமெடி வகையைச் சேர்ந்தது என்பதால், ரசிகர்களிடையே அதிகளவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
திரைப்படம் வெளியான முதல் நாளே, சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் பெரும்பாலானதாக பதிவாகியுள்ளன. விமர்சகர்கள் குறிப்பிட்டதைப்போல், கதைக்களம் மற்றும் திரைக்கதை என்பன தொடர்பாக பல இடங்களில் குறை கூறப்பட்டது.

விமர்சனங்கள் வெளியாகிய பின்னர் பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் , “இயக்குநர் மாருதி படம் நல்லா இல்லைன்னா என் வீட்டுக்கு வந்து திட்டுங்க என்று அட்ரஸ் கொடுத்தார். உங்க வீட்டுக்கு வரோம் ரெடியா இருங்க..” என்ற வகையில் காமெடியுடன் மீம்ஸ்களையும் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், “தி ராஜா சாப்” படத்தின் 3 நாள் அதிகாரபூர்வ வசூல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 3 நாட்களுக்குப் பின் 183 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது..
Listen News!