• Jan 13 2026

பொலிஸ் ஸ்டேஷனில் வெளிவந்த உண்மை... கேள்விக்குறியாகும் மயில் வாழ்க்கை.! அதிரடித் திருப்பம்

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் மீனா கிட்ட அம்மாக்கு கால் பண்ணி கதைச்சியா எப்புடி இருக்காங்க என்று கேட்கிறார். அதுக்கு மீனா நீங்களே அதை கேட்கலாம் தானே என்கிறார். பின் செந்தில் நகையை வாங்கிட்டு அவங்க அப்படியே போனால் ரொம்ப சந்தோசம் என்கிறார். அதைக் கேட்ட மீனா நகை விஷயத்தை இவர் கிட்ட சொல்லிடலாமா என்று யோசிக்கிறார்.

மறுபக்கம் கதிர் கடையை திறந்து எல்லா வேலையையும் பார்க்கிறார். பின் பாண்டியன் கடைக்கு வந்து நிற்கிறதைப் பார்த்த கதிர் நீங்க எதுக்காக வந்தனீங்க என்று கேட்கிறார். அதுக்கு பாண்டியன் எவ்வளவு நேரம் தான் வீட்டிலேயே இருக்கிறது என்கிறார். அதைத் தொடர்ந்து செந்தில் கடைக்குப் போய் பாண்டியனைப் பார்த்து எதைப் பற்றியும் யோசிக்காதீங்க என்கிறார்.


அதைத் தொடர்ந்து எல்லாரும் நகையை கொடுக்கிறதுக்காக பொலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் நிற்கிறார்கள். பின் ராஜி மீனாவுக்கு போன் எடுத்து நகையை வைச்சு ஏதும் பிரச்சனை பண்ணுவாங்களா என்று கேட்கிறார். அதுக்கு மீனா அவங்களுக்கு மயில் அக்கா வாழ்க்கை மேல கொஞ்சம் அக்கறை இருந்தால் இந்த மாதிரி பண்ணி வைக்க மாட்டாங்க என்கிறார்.

இதனை அடுத்து, பாக்கியம் பொலிஸ் கிட்ட 80 பவுண் நகையை கொடுத்தோம் என்று சொல்லுறார். பின் நகை எல்லாத்தையும் மீனா மேசையில வைச்சதைப் பார்த்த பாக்கியம் எல்லாமே கறுத்து போய் இருக்கு என்று சொல்லுறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் நாங்க கொடுத்த நகை எல்லாத்தையும் எடுத்திட்டாங்க என்று சொல்லி அழுகிறார். அதைத் தொடர்ந்து மீனா நடந்த எல்லா உண்மையையும் பொலிஸ் கிட்ட சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement