சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , ரோகிணி செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனோஜ் தவிக்கின்றார். இதன்போது விஜயா அவருக்கு ஆறுதல் கூறுகின்றார்.
அதன் பின்பு ரோட்டில் தனியாக நடந்து வந்த மீனா, பசி மயக்கத்தில் விழ , அந்த நேரத்தில் இதை பார்த்த ஸ்ருதி, ரவி ஓடி வந்து பிடித்து விடுகின்றனர். அதன் பின்பு மீனாவை அவருடைய அம்மா வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
அங்கு அவர் சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்க, முத்து வருகின்றார். ஆனாலும் அவர் கோபமாக பேச, மீனா மேலும் அழுகிறார். இதனால் ரவி அண்ணாமலைக்கு போன் பண்ணி அங்கு வருமாறு அழைக்கின்றார்.

இன்னொரு பக்கம் ரோகிணியை வைத்து காய் நகர்த்துவதற்கு சிந்தாமணி பிளான் பண்ணுகின்றார். அதன்படி, தான் இப்படி இருக்க காரணம் முத்துவும் மீனாவும் தான். அவர்களை அந்த வீட்டில் நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்று ரோகிணி உறுதியாக இருக்கின்றார்.
இதனால் அவரை வைத்து விஜயாவின் வீட்டை ஆட்டையை போடுவதற்கு சிந்தாமணி பிளான் பண்ணுகின்றார். மேலும் இதற்காகத்தான் விஜயாவுடன் நெருங்கி பழகுவதாகவும் ஓப்பனாக கூறுகின்றார்.
இறுதியில் வீட்டிற்கு வந்த அண்ணாமலையிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றார் மீனா. அதன் பின்பு முத்து கொஞ்சம் சமாதானமாகி, நானும் சாப்பிடவில்லை நீ சாப்பிட்டால் தான் சாப்பிடுவேன் என்று கூறுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!