கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் கே ஜி எஃப் படப்புகழ் யாஷ், கியாரா அத்வானி, நயன்தாரா நடித்திருக்கும் டாக்ஸிக் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தில் வெளியான ட்ரெய்லர் சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. கே ஜி எஃப் படத்திற்கு பிறகு யாஷ் நடிக்கும் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதில் நயன்தாராவும் இணைந்துள்ளது மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்த நிலையில், டாக்ஸிக் படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட சம்பள விபரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவுக்கு 10 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது டாக்ஸிக் படத்தில் நடிப்பதற்கு அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். 41 வயதான நயன்தாரா எப்படி இவ்வளவு இளமையாக இருக்க முடியும் என பலரும் வியந்து வருகின்றனர். ஆனாலும் அவருக்காக தியேட்டருக்கு கூட்டம் வரும். அதனால் அவருக்கு 15 கோடி ரூபாய் கொடுத்தாலும் தவறில்லை என்று பேசப்படுகிறது.
மேலும் முன்னணி ஹீரோ ஒருவருக்கு 200 கோடி சம்பளம் என்றால், அந்தப் பட ஹீரோயினுக்கு ஐந்து அல்லது ஆறு கோடி ரூபாய் கொடுக்கின்றார்கள். ஏன் நடிகைகளுக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை என்ற புகாரும் எழுந்தது.
பராசக்தி படத்தில் நடிகைகளுக்கு மட்டுமல்ல பெண் இயக்குனர்களுக்கும் சரியான சம்பளம் கிடைப்பதில்லை என அந்தப் படத்தில் இயக்குனர் சுதா கொங்காரா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!