சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய ப்ரோமோவில், பார்வதி ரோகிணிக்கு கொஞ்ச காசைக் கொடுத்து இப்ப நீ அடைக்களம் கேட்டு வந்திருக்க ஆனா என்னால உனக்குப் பண்ண முடியாது என்கிறார். மேலும், நீ பண்ண தப்ப எந்தக் குடும்பத்திலயும் ஏத்துக்கமாட்டாங்க என்கிறார்.

பின் ரோகிணி சிந்தாமணி வீட்ட போய் இப்ப என்னோட இந்த நிலைமைக்கு காரணமே முத்துவும் மீனாவும் தான்.. அவங்களை இந்தக் குடும்பத்தை விட்டே துரத்த போறேன் என்கிறார். அதைக் கேட்ட சிந்தாமணி நீ நினைச்சதை சாதிக்க என்ன உதவி செய்யணுமோ அதை நான் செய்கிறேன் என்கிறார்.
பின் சிந்தாமணி நான் ஆடப்போற ஆட்டத்திற்கு ரோகிணி தான் துருப்புச் சீட்டு என்கிறார். மேலும், இதை பயன்படுத்தி அந்த வீட்டை என்னோட பெயருக்கு மாத்துறேன் என்கிறார் சிந்தாமணி.
Listen News!