தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கமல்ஹாசன், தனது புகழ் மற்றும் திரைபட சாதனைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மூலம், அவரது பெயர், புகைப்படங்கள் மற்றும் “உலகநாயகன்” என்ற பட்டத்தை, அனுமதி இல்லாமல் வணிக ரீதியில் பயன்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, சென்னையில் உள்ள ‘நீயே விடை’ என்ற நிறுவனம் தனது உருவம் மற்றும் திரைப்பட வசனங்களை அச்சிட்டு டி-ஷர்ட்டுகளை விற்பனை செய்து வருவதை அறிந்தே இந்த முடிவினை எடுத்துள்ளார் கமல் ஹாசன்.
நடிகர் மனுவில்,“எனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் உலகநாயகன் பட்டத்தை அனுமதி இல்லாமல் யாரும் வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது. இதுபோன்ற செயல்கள் என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்.” என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கமல்ஹாசனின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, இதற்குப் பின் யாரும் அனுமதி இல்லாமல் அவரது பெயர், புகைப்படம் மற்றும் “உலகநாயகன்” பட்டத்தை வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது என்று தற்பொழுது இடைக்கால தடை விதித்துள்ளது.
வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே நிரந்தர தீர்வு வரும்வரை இடைக்கால உத்தரவாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!