• Jan 18 2025

கல்யாண கோலத்தில் வந்திறங்கும் கதிர்-ராஜீ... நடந்ததை சொல்லும் பாக்கியா... கடும் கோபத்தில் சக்திவேல்... பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கம் தொடரில்  இனி என்ன நடைபெற போகிறது என பார்ப்போம் வாங்க.  


கதிர் மற்றும் ராஜிக்கு கல்யாணம் முடிந்த பிறகு பாக்கியா அவர்களை வீட்டுக்கு அழைத்து வருகிறார். மாலையும் கழுத்துமாக ராஜி மற்றும் கதிர் வந்து இறங்கியது கண்டு பாண்டியன் மற்றும் சக்திவேல் குடும்பத்தினர் அதிர்ச்சியாகி நிற்கின்றனர்.  அப்போது சக்திவேல் போயிம் போயிம் இவனையா கல்யாணம் பண்ணின என்று கேட்கிறார். 


அண்ணனுக்கு மானபங்கம் ஆகிற கூடாதுனு கோமதி கல்யாணம் பண்ணிவச்சி இருப்பாங்க ஆனா ஒரு தப்பும் பண்ணாத கதிர் எல்லா திட்டையும் வாங்கிட்டு சிலை போல நிற்கிறார். கதிர் தான் சொத்துக்கு ஆசைபட்டு ராஜியை மயக்கி கல்யாணம் பண்ணிக்கொண்டார் என எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் முத்துவேல் அவன் கூப்பிட்டா இவளுக்கு எங்க போச்சி அறிவு நம்ம மேலையும் தான் தப்பு இருக்கு இனிமே அவ நம்ம வீட்டு பொண்ணே இல்லனு சொல்லுறாரு. 


அந்த பக்கம் கோபியும், ராதிகாவும் இவங்க இங்க என்ன பண்ணுறாங்க என்று குழம்பி பாக்கியா, எழிலை  பார்த்து கொண்டு இருக்கின்றனர். அப்போது பாக்கியா "அந்த பையன் உங்க பொண்ண சொத்துக்காக ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை உங்க பொண்ணுதான் நகை எல்லாம் எடுத்துட்டு வந்து இருக்கா. அந்த பையன் வேணாம் என்று தான் சொன்னான்". 


"அவங்க நகையை ஒரு திருட்டு பையன் திருடிட்டு போய்ட்டான்.  நாங்க தங்கி இருந்த ஹொட்டெல்லத்தான் இவங்களும் தங்கி இருந்தாங்க அதுனால எனக்கு எல்லாம் தெரியும்" என்று பாக்கியா சொல்கிறார். மற்ற பக்கம் பாண்டியன் யார் என்ன சொன்னாலும் கதிர் மேல ரொம்ப கோவத்துல இருக்காரு. "என்ன நம்ப வச்சி கழுத்த அறுத்துட்டியேடா என்ன சரி விடு உங்க அம்மாவ பத்தி யோசிச்சி பாத்தியா இனி இந்த வீட்டுல உனக்கு இடம் இல்லை" என்று சொல்லி விரட்டி விடுகிறார்.  

Advertisement

Advertisement