• Jan 19 2025

ஓம் நமச்சிவாயா செல்லம்மா.. பக்தி பழமாக மாறிய குக் வித் கோமாளி அன்ஷிகா..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’செல்லமா’ சீரியல் நாயகி அன்ஷிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்தி பழமாக மாறிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் அன்ஷிதா, செல்லமா சீரியலில் அட்டகாசமான கேரக்டரில் அடித்து வருகிறார் என்பதும் அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாகவும் அன்ஷிதா கலக்கி வருகிறார் என்பதும் இதன் மூலம் அவருக்கு மேலும் பெயரும் புகழும் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அன்ஷிதா, சமீபத்தில் பர்வத மலைக்கு சென்ற நிலையில் அங்கு அவர் விபூதி குங்குமம் வைத்து பக்தி பழமாக மாறிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

நீங்கள் ஒரு அசல் பெண் சாமியார் போல இருக்கிறீர்கள் என்றும், நான் உங்களை பார்க்க மிகவும் மரியாதையாக இருக்கிறது என்றும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலகலப்பாக இருந்த நீங்களா இப்படி பக்தி பழமாக மாறி உள்ளீர்கள் என்றும் பல விதமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement