• Jan 19 2025

நெப்போலியன் மகனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது! பொண்ணு யாரு தெரியுமா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லனாகவும் ஹீரோவாகவும் கலக்கிய நடிகர்களுள் மிகவும் முக்கியமானவர் நெப்போலியன். இவர்  சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு வந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார்.

இவரின் உடல் கட்டமைப்பை பார்த்த பாரதிராஜா 'புது நெல்லு புது நாத்து' என்ற படத்தில் இவருக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

அதன்பின் வில்லனில் இருந்து ஹீரோவான நெப்போலியன் சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, கிழக்கு சீமையிலே, மிட்டா மிராசு, போக்கிரி, தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழின் உச்சியில் காணப்பட்டார்.


சுமார் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், அரசியலிலும் மிகப்பெரிய ஆளுமையாக காணப்பட்டார். எனினும் தனது  மகனுக்கு ஏற்பட்ட அரிய வகை பிரச்சினையின் காரணமாக அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் அமெரிக்காவில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றார்.


இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் திருமணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒரு சில பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


மேலும் நெப்போலியன் மூத்த மகளான தனுஷ் திருமணம் செய்து கொள்ளும் அக்ஷயா என்ற பெண்ணின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நேற்றைய தினம் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் எளிமையாக  நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு தற்போது ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement