பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்பொழுது மயில் குடும்பத்தின் செயலால் புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், தற்பொழுது வெளியாகியுள்ள ப்ரோமோ இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
அதில், பாக்கியம் பொலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் 80 பவுண் நகை போட்டேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா ஷாக் ஆகுறார். பின் மீனா நகையை எடுத்து வெளியில வைச்ச உடனே அதைப் பார்த்த பாக்கியம் எல்லா நகையும் கறுத்து கிடக்கு... 80 பவுண் நகையும் போச்சு என்று சொல்லி அழுகிறார்.

அதைக் கேட்ட மீனா இப்படி அபாண்டமா பேசாதீங்க என்கிறார். அதைத் தொடர்ந்து பொலிஸ் எப்புடி எல்லா நகையும் கவரிங்கா மாறி இருக்கு என்று கேட்கிறார். அதுக்கு மீனா இவங்க பொய் சொல்லுறாங்க இவங்க போட்டதில 8 பவுண் மட்டும் தான் தங்கம். மீதி எல்லாமே கவரிங் என்கிறார்.
அதைக் கேட்ட பொலிஸ் முதலில உங்க பொண்ணை வரச்சொல்லுங்க என்கிறார். மயில் ஸ்டேஷன் வந்த உடனே பொலிஸ் உங்க அம்மா சொன்னது உண்மையா என்று கேட்கிறார். அதுக்கு மயில் அமைதியாக இருக்கிறார். இது தான் இனி நிகழவிருப்பது....
Listen News!