பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது சபரி, அரோரா, விக்ரம் மற்றும் திவ்யா ஆகிய நான்கு போட்டியாளர்கள் மட்டுமே காணப்படுகின்றனர்.
இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்டபோது இதில் யார் டைட்டில் வின்னருக்கு தகுதியானவர்கள் என்பதை கணிக்க முடியாமல் இருந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு இதில் முக்கிய போட்டியாளர்களாக பார்வதி, கமருதீன், சபரி மற்றும் கானா வினோத் ஆகியவர்கள் காணப்பட்டனர்.
எனினும் இவர்களுள் பார்வதிக்கும் கமருதீனுக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு கானா வினோத் 18 லட்சம் பணப் பெட்டியுடன் வெளியேறினார். இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து இறுதியாக சான்ட்ரா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். தற்போது கமருதீன் எலிமினேட் ஆகி வெளியே சென்ற பின்பு ரசிகர்கள் அவரை கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
இந்த நிலையில், கமருதீன் வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்ட நேரத்தில் கானா வினோத் அவருடன் வீடியோ காலில் இருந்துள்ளார். தற்போது இந்த விடயம் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவர்களுடைய பிரண்ட்ஷிப் எப்போதும் தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல வினோத்தின் மனைவியும் அதனை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
Listen News!