• Jan 19 2025

விஜய் திருமண மண்டபங்களுக்கு குடைச்சல்.. அம்பானி உதவியை நாடிய தளபதி..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருக்கு தற்போது குடைச்சல் கொடுக்கும் நிகழ்வுகள் தொடங்கி விட்டதாக தெரிகிறது.

குறிப்பாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் அவருக்கு சொந்தமாக திருமண மண்டபங்கள்  இருக்கும் நிலையில், அந்த திருமண மண்டபங்கள்  உள்ள நிலத்திற்கு பட்டா இருக்கிறதா, மண்டபத்திற்கு ஒழுங்காக வரிகள் செலுத்தப்பட்டு வருகிறதா, மண்டபம் சரியாக பிளான் போட்டு கட்டப்பட்டிருக்கிறதா, மண்டபத்திற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதால், என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கேப்டன் விஜயகாந்த் அரசியல் கட்சியை தொடங்கிய போது தனக்கு போட்டியாக அவர் வருவார் என்று நினைத்த திமுக, அவரது திருமண மண்டபத்தை இடித்தது என்பது தெரிந்தது. அதேபோல் விஜய்க்கும் ஏதாவது குடைச்சல் கொடுத்தால் அவர் அரசியல் கட்சியே வேண்டாம் என்று தெறித்து ஓடுவார் என்ற கணக்கில் இது போன்ற சில நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதையெல்லாம் எதிர்பார்த்து விஜய் அதிரடி முடிவு எடுத்துள்ளதாகவும், அவர் தனது திருமண மண்டபங்களை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள சில திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சூப்பர் மார்க்கெட் வைத்துக்கொள்ள மாத வாடகைக்கு அவர் ஒப்பந்தம் போட இருப்பதாகவும் ஏற்கனவே தனது மனைவி, மகன் மற்றும் அம்மா பெயரில் உள்ள சில திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் நிறுவத்திற்கு அவர் வாடகைக்கு விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.



ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாடகைக்கு விட்டு விட்டால் அம்பானியிடம் அரசு அதிகாரிகள் மோத மாட்டார்கள் என்று அவர் முன்கூட்டியே புத்திசாலித்தனமாக முடிவு எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement