• Jan 19 2025

இப்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச ரவுடி..! எல்லைமீறும் மீனாவின் ரொமான்ஸ்! வெயிட்டர் வேலையை உளறிய மனோஜ்! மீண்டும் ரணகளமான விஜயா வீடு

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

சமயலறையில் மீனா இருக்க, அங்கு வந்த விஜயா, முத்துவை வைத்து பேசுகிறார். மேலும், சவால்ல வின் பண்ணிட்டம் என்று ரொம்ப ஆடாத, அவன் இப்படியே இருக்க மாட்டான், மாறிடுவான் என சொல்கிறார்.

இதையடுத்து, வீட்டுக்கு வந்த முத்து, மீண்டும் கல்யாணம் செய்த போது எடுத்த புகைப்படங்களை அண்ணாமலைக்கு காட்ட அவர் ரொம்ப சந்தோசப்படுகிறார். ஸ்ருதி, ரவியும் சந்தோசப்பட, விஜயா முகம் சுழித்து பேசுகிறார். 


இந்தப் போட்டோவ ஹால்ல மாட்ட போறேன் என சொல்ல, விஜயா உன் ரூம்ல மாட்டு என சொல்கிறார். அதற்கு இன்னும் பெருசா செய்து ஹால்ல தான் மாட்டுவேன் என சொல்கிறார்.

இதையடுத்து, ரூம்க்கு சென்ற முத்து, கல்யாணம் முடிஞ்ச சாந்திமுகூர்த்தம் தானே, அதற்கு ஏற்பாடு பண்ணலையா என மீனா கூட ரோமன்ஸ் பண்ணுகிறார்.

மறுபக்கம், தூங்கிக் கொண்டு இருந்த மனோஜ், ஹோட்டலில் உள்ள சாப்பாட்டு மெனுவை ஓடருக்கு உளறுகிறார். இதை பார்த்து ரோகிணி அவரை தட்டி எழுப்பி, என்ன ஹோட்டல் வெயிட்டர் போல கத்துறா என கேட்க, நானா வெயிட்டர் .. சீ ..சீ .. நான் இல்லை என சமாளிக்கிறார். அதன் பின் இருவரும் சந்தோசமாக கதைத்து சிரிக்கிறார்கள்.இன்னொரு பக்கம் ரவியும், ஸ்ருதியும் கேம் விளையாடிக் கொண்டு சத்தம் போட்டு சிரிக்கிறார்கள்.


இதைக் கேட்ட விஜயா, முதல்ல அந்த ரூம்ல சிரிச்சு சத்தம் கேட்டிச்சு, இப்போ இந்த ரூம்ல கதைச்சி சத்தம் கேட்டிச்சு நடுராத்திரியில இப்படியா சிரிக்கிற என அண்ணாமலையிடம் சொல்ல, அப்போ வா நானும் நீயும் சிரிச்சு பேசுவோம் என அவர் சொல்கிறார். மேலும், வீட்டுல பிள்ளைகள் சந்தோசமா இருந்தா அத பாத்து சந்தோசப்படு என சொல்கிறார்.

மறுநாள் காலையில், இனி எங்களுக்கு டிபன் செய்ய வேணாம் என ரோகிணி மீனாவிடம் சொல்கிறார். அதன்பின் மனோஜ்க்கு கடையில் இருந்து மசாலா தோசை வாங்கி வந்து டேபிள் மீது வைத்துவிட்டு மனோஜை அழைக்க செல்கிறார் ரோகிணி.

அந்த நேரத்தில் வந்த முத்து, இன்னைக்கு கடை சாப்பாடா என அதனை எடுத்து சாப்பிட, மீனா வந்து அது ரோகிணி வாங்கி வந்தது என சொல்ல, அப்போது ரோகிணியும் வந்து கடுப்பாகி நிற்கிறார்.

அதன் பின்னும் முத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க, ராகினி வாங்கி வந்த என்று தெரிஞ்ச பிறகும் சாப்பிடுறியா என முத்துவை திட்ட, அங்கு வந்த அண்ணாமலை சாப்பாடு தானே..வேற ஒன்றும் இல்லையே.. என சமாளிக்க, இவன் வேணும் என்று தான் இப்படி செய்றான் என ஏத்தி விடுகிறார் விஜயா. இது தான் இன்றைய எபிசோட்..

Advertisement

Advertisement