உலகநாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்த நிலையில் இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல் காரணமாக கமல்ஹாசன் சினிமாவில் பிசியாக இருக்கிறார் என்றும் ’தக்லைஃப்’ ’இந்தியன் 3’ ’கல்கி 2898 ஏடி 2’ உள்பட சில படங்களில் அவர் கமிட் ஆகியுள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு படங்களையும் முடிப்பது சாத்தியமில்லை என்பதால் தான் அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்ததும் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் கமல்ஹாசன் சினிமா, பிக் பாஸ், அரசியல் என மூன்றையும் குழப்பி வருவதால் தான் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
விஜய் மாதிரியே சினிமாவை முழுவதுமாக விட்டுவிட்டு கமல் அரசியலில் குதித்தால் மட்டுமே அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் அதனால் தான் படிப்படியாக அவர் முழுவதுமாக அரசியலில் ஈடுபட முதல் கட்டமாக பிக் பாஸில் இருந்து வெளியே வந்திருக்கிறார் என்றும் அதன் பிறகு அவர் படங்களில் நடிப்பதிலும் குறைத்து கொள்ள அல்லது நிறுத்திக் கொள்ளும் முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
கட்சி ஆரம்பித்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஒரு எம்எல்ஏ, எம்பி கூட இல்லாத நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் விஜய் களத்தில் இறங்கி ஓரளவு வெற்றி பெற்றால் கூட அது கமலுக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும் என்பதால் தான் கமல்ஹாசனும் அடுத்த இரண்டு வருடங்களில் முழுமையாக அரசியலில் ஈடுபட முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
Listen News!