• Oct 04 2024

பிக்பாஸ் தமிழ் தொகுப்பாளர் யார்? ரேஸில் 3 பேர்.. அதில் ஒருவர் நடிகை..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகுவதாக அறிவித்துள்ளதை அடுத்து மிகப்பெரிய கேள்வி இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தொகுத்து வழங்குவது யார் என்பது தான்.

கமலுக்கு இணையாக ஒருவர் சுவாரஸ்யமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான் என்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை இதற்கு முன்னர் தொகுத்து வழங்கிய அனுபவம் உள்ளவர்களை தேர்வு செய்ய பிக் பாஸ் குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கமல்ஹாசனுக்கு பதிலாக சில வாரங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு தான் குழுவினர்களின் முதல் சாய்ஸ் என்று கூறப்படுகிறது. சிம்பு எதையும் மனதில் பட்டதை பேசுவார் என்பதும், யார் பெரியவர் யார் சிறியவர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் நடுநிலையோடு தீர்ப்பு வழங்குவார் என்றும் அதனால் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு சிம்பு தான் சரியான ஆள் என்றும் கூறப்பட்டு வருகிறது.



ஒரு வேலை சிம்பு தான் பிஸியாக இருப்பதால் முடியாது என்று கூறிவிட்டால் சேனல் தரப்பின் அடுத்த சாய்ஸ் விஜய் சேதுபதி என்றும் ஒரு படி மேலே போய் விஜய் சேதுபதியிடம் சேனல் தரப்பினர் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சன் டிவியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் விஜய் சேதுபதிக்கு இருப்பதால் அவர் இந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரேசில் இருக்கும் இன்னொருவர் ரம்யா கிருஷ்ணன். கமல்ஹாசனுக்கு பதிலாக ஒரே ஒரு எபிசோடை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்குவாரா என்று சேனல் தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் இதற்கு விடை இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement