• Jan 19 2025

நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சட்டப்போராட்டம்.. மகனுக்காக நடிகர் விதார்த் எடுத்த அதிரடி முடிவு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த பிரச்சனை இருந்து வரும் நிலையில் இதை வைத்து ஒரு திரைப்படத்தை தைரியமாக தயாரிக்க முன்வந்துள்ள ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் ’அஞ்சாமை’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தின் நாயகன் விதார்த் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கும் நிலையில் நீட் தேர்வு அந்த மாணவனின் கனவை கலைக்கிறது. இதனை அடுத்து நீதிமன்றம் செல்லும் அந்த மாணவனுக்கு ஆதரவாக ரகுமான் வழக்காடும் நிலையில் நீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இறுதியில் விதார்த் மகனுக்கு மெடிக்கல் சீட் கிடைத்ததா? நீட் தேர்வுக்கு தீர்வு கிடைத்ததா? என்பதை இந்த படத்தின் கிளைமாக்ஸில் காண்பித்திருக்கிறார்கள்.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதார்த் ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ள இந்த படத்தில் வழக்கறிஞர் கேரக்டரில் ரகுமான் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை சுப்புராமன் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’அஞ்சாமை’ படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Advertisement

Advertisement