• Jan 19 2025

சன் டிவியில் பிக்பாஸ் கேப்ரில்லாவின் புதிய சீரியல்.. இதுதான் கதையா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சமீப காலமாக புதுப்புது சீரியல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும், இன்னும் சில சீரியல்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவை குறித்த தகவலும் அவ்வப்போது வெளிவர இருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் ராகுல் மற்றும் கேப்ரில்லா நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் இந்த சீரியலின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த சீரியலுக்கு ’மருமகள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.



இந்த சீரியலில் கேப்ரில்லா மற்றவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் சந்தோசத்தை காணும் மகிழ்ச்சியான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அதற்கு எதிராக யாருக்கும் எதையும் கொடுக்காமல் தான் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலவாதி கேரக்டரில் ராகுல் நடித்திருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் இணையும் நிலையில் இவர்களுக்குள் என்ன பிரச்சனை வருகிறது? அதை எப்படி சமாளிக்கிறார்கள்? என்பதுதான் இந்த சீரியலின் கதை என்பது முன்னோட்ட வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

மொத்தத்தில் சன் டிவியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் தேதி, நேரம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement