சுமார் 33 வருடங்களுக்கு முன்பு 'ஹம்' என்ற ஹிந்தி படத்தில் ரஜினியும் அமிதாபச்சனும் சேர்ந்து நடித்திருந்தார்கள். இந்த கூட்டணி மீண்டும் வேட்டையன் படத்தில் இணைய உள்ளது என்ற தகவல் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அத்துடன் இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகின்றார் என்ற தகவல் மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது.
இந்தியாவில் சூப்பர் ஸ்டார் ஆக திகழும் ரஜினிகாந்த் மற்றும் அமிதாபச்சன் சேர்ந்து இந்த படத்தில் நடித்திருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு பல மாதங்களாகவே காணப்பட்டது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் இந்தியாவில் 55 கோடிகளை பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் கூடிய விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே லைக்கா தயாரிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிய அளவில் போகாததால் நஷ்டம் அடைந்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது வேட்டையன் திரைப்படத்தையும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தையும் தான் நம்பி இருந்தது. ஆனால் வேட்டையன் நடுநிலையான கலெக்சன் தான் பெற்று வருகின்றது.
தீபாவளிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களிலும் தியேட்டர்கள் காத்து வாங்கிக் கொண்டுள்ளன. எனவே வசூல் வேட்டை சரிவை சந்தித்துள்ளது.
இவ்வாறான நிலையில் வேட்டையன் படத்தின் ஓடிடி உரிமையை 90 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாம். இதற்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்படத்தையும் அமேசான் தான் வாங்கி உள்ளது. மேலும் வேட்டையன் திரைப்படம் ஒரு மாதத்திற்குள்ளேயே ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!