• Nov 24 2025

பிக் பாஸ் வீட்டில் கதறியழுத சின்ன பொண்ணு சாச்சனா! ஓவர் திமிரில் ஆடும் பாய்ஸ் டீம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்குள்ளையே பிக் பாஸ் நிகழ்ச்சி தான் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்கும் ஒரு ஷோவாக காணப்படுகிறது. இதன் காரணத்தினால் ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி தவறாமல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

பிக் பாஸ் சீசன் 8இன் முதலாவது வாரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிகளுக்கு ரிவியூ பண்ணும் இவர், இந்த நிகழ்ச்சியின் தந்திரங்களை புரிந்து கொண்டு கடைசி வரை இருப்பார் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனாலும் முதலாவது வாரத்திலேயே எலிமினேட்டாகி வெளியே  வந்து விட்டார்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதன் இறுதியில் சாச்சனா கதறி அழும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.


அதாவது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் சமைப்பதற்கு பெண்கள் அணியில் இருந்து இரண்டு பேரை தெரிவு செய்ய சொன்னவுடன் ஜாக்குலின் சாச்சனாவின் பெயரை பாய்ஸ் டீம் சொல்லுகின்றார்கள். 

மேலும் ஒரு வாரம் முழுவதும் இவர்கள் மட்டும் தான் சமைத்து பாத்திரமும் விளக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். இதனால் மொத்த பெண்கள் அணியுமே கோபப்பட்டு பேசுகின்றது. ஒரு கட்டத்தில் சாச்சனா அழுதே விடுகின்றார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement