• Nov 25 2025

வாரேவா வசூல் எகுருதே... ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்... அடித்து நொறுக்கும் முதல் வார வசூல்...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் படு மாஸாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்நிலையில் தற்போது வசூல் நிலவரம் குறித்து பார்ப்போம்.


ராகவா மற்றும், ஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இப்படம் முதல் நாள் சுமாரான வசூல் என்றாலும், படத்தின் விமர்சனம் நாளுக்கு நாள் வசூலை அதிகரித்துக்கொண்டே வந்தது.


அந்த வகையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஒரு வார முடிவில் உலகம் முழுவதும் ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்திலேயே இப்படம் சுமார் ரூ 30 கோடி வரை வசூல் வந்திருக்கும் என்று கூறப்படுகின்றது. இன்னும் இந்த திரைப்படம் வசூல் செய்யும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement