சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலர் வெற்றிபெற்று அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையிலேயே மு . க ஸ்டாலினுக்கும் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் "நாற்பதுக்கு நாற்பது என்பது மாயத்தால் நிகழ்ந்ததல்ல நிர்வாகத் திறம் என்ற நியாயத்தால் நிகழ்ந்தது இந்த வெற்றி உங்கள் ஆட்சியின் மாட்சிக்குக் கிடைத்த சாட்சி என்று சொல்லி முதலமைச்சருக்குப் பொன்னாடை பூட்டினேன்.
பதற்றமில்லாமல் வெற்றியின் பகட்டு இல்லாமல் இயல்பான புன்னகையோடு இருந்தார் வென்றார்க்கு அழகு தோற்றாரை மதித்தல் தோற்றார்க்கு அழகு வென்றாரை வியத்தல் பதவிக்கு அழகு உதவிகள் தொடர்தல் மக்களுக்கு அழகு மறுவேலை பார்த்தல்"என தனது X தல பக்கத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
நாற்பதுக்கு நாற்பது என்பது
மாயத்தால் நிகழ்ந்ததல்ல
நிர்வாகத் திறம் என்ற
நியாயத்தால் நிகழ்ந்தது
இந்த வெற்றி
உங்கள் ஆட்சியின் 
மாட்சிக்குக் கிடைத்த சாட்சி
என்று சொல்லி
முதலமைச்சருக்குப்
பொன்னாடை பூட்டினேன்
பதற்றமில்லாமல்
வெற்றியின் பகட்டு இல்லாமல்
இயல்பான புன்னகையோடு இருந்தார்… pic.twitter.com/bCcJQKJfDL
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!