• Jan 19 2025

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் கால்பதிக்க கோடி கணக்கில் சம்பளம் பெற்ற வடிவேலு?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றார்கள்.

இந்த நிகழ்ச்சி அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளியில் பிரபலமாக காணப்பட்ட வெங்கடேஷ் பட் இதற்கு தலைமை தாங்கின்றார்.


அடுத்த வார டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி எபிசோட் ப்ரோமோ இன்று வெளியானது. அதில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு கெஸ்ட் ஆக பங்கு பற்றி உள்ளார்.


இந்த நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வடிவேலு வாங்கிய சம்பள விபரம் வெளியாகி உள்ளது.

அதில் ஒரு எபிசோட்டுக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் வடிவேலு. தற்போது ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement