• Nov 25 2024

4 இந்திய மொழிகள், ஒரு வெளிநாட்டு மொழி.. ரீமேக் ஆகும் ஹரிஷ் கல்யாண் திரைப்படம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

ஹரிஷ் கல்யாண் நடித்த திரைப்படம் 4 இந்திய மொழிகளிலும் ஒரு வெளிநாட்டு மொழியிலும் ரீமேக் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ’பார்க்கிங்’. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் இடையே ஏற்படும் ஒரு சின்ன ஈகோ பிரச்சனை எவ்வளவு பெரிய பிரச்சனையாக பூதாகரமாக வெடிக்கும் என்பதை மிகவும் உணர்வு பூர்வமாக காண்பிக்கப்பட்டிருக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 17 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.



இந்த நிலையில் ’பார்க்கிங்’ திரைப்படம் வெளியான போது இது ஒரு வெளிநாட்டு படத்தின் ரீமேக் படம் என்று ஒரு சிலர் விமர்சனம் செய்த நிலையில் தற்போது இந்த படத்தை ஒரு வெளிநாட்டு மொழியில் ரீமேக் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் அது மட்டும் இன்றி நான்கு இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்களை  வெளியாகின. இதற்கான ஒப்பந்தத்தில் ’பார்க்கிங்’ படத்தின் தயாரிப்பாளர் கையெழுத்திட்டதாகவும் விரைவில் 5 மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’பார்க்கிங்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில்  ஹரிஷ் கல்யாணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் ’நூறு கோடி வானவில்’ ‘டீசல்’ மற்றும் ’லப்பர் பந்து’ ஆகிய மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று படங்களும் வெற்றி பெற்றால் அவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement