• Aug 01 2025

கூண்டுக் கிளியாக மாறிய த்ரிஷா...!வைரலான இன்ஸடா போட்டோ ஷுட்...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தமிழ், தெலுங்கு  எனப்  பல மொழிகளில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கின்றார். தனது சமூக வளைத்தளப்பக்கத்தில்  போட்டோ ஷுட் ஒன்றினை நடத்தி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 


 தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் "தக்லைஃப்" திரைப்படம் நடித்துள்ளார். ஜூன் 5 ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த  நிலையில் ரசிகர்கள் திரைப்படத்தின் ரிலீஸுக்காக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள். இந்நிலையில் பல விதமான போட்டோ ஷுட்டினை நடத்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.


தற்போது  சமூக வலைத்தளப்பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ள இவர் . கூண்டுக்குள் இருப்பது போன்றும் அதன் மீது நின்றும் பல புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் 42 வயதிலும் அதே அழகுடன் இருப்பதாக  தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 



Advertisement

Advertisement