• May 30 2025

வனிதா எப்பவுமே குழந்தை…யாரும் எதிர்பார்க்காத பக்கம்..!– மகள் ஜோவிகாவின் உருக்கமான பகிர்வு!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று, ரசிகர்களிடம் தனி அடையாளம் ஒன்றை உருவாக்கியவர் ஜோவிகா விஜயகுமார். நடிகை வனிதா விஜயகுமார் மகளாக மட்டுமல்லாமல், தன் எண்ணங்களையும், நேர்மையையும் வெளிப்படையாக பேசுவதன் மூலமும் பலரின் கவனத்தை ஈர்த்தார்.


சமீபத்திய வீடியோ ஒன்றில் ஜோவிகா, தன் குடும்பம், பிக்பாஸ் அனுபவம் மற்றும் எதிர்கால கனவுகள் குறித்தும் உருக்கமாகப் பேசியுள்ளார். அந்தவகையில் வனிதா விஜயகுமார் குறித்து பேசும் போது ஜோவிகாவின் முகத்தில் புன்னகையும் பாசமும் மின்னியது.

“அம்மா குழந்தை மாதிரியே இருப்பாங்க. எப்பவும் polite-ஆ பேசுவாங்க." என்று சிரித்தவாறு கூறியிருந்தார். இந்த உரையாடல், வனிதா விஜயகுமார் மீதான பொதுவான கருத்துக்களுக்கு மாறாக, ஒரு மகளின் பார்வையை வெளிப்படுத்துகின்றது.


ஜோவிகா பிக்பாஸில் “படிப்பு தேவையில்லை” என கூறியதாக சமூக ஊடகங்களில் பரவிய கருத்துக்கள் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார். "நான் பிக்பாஸில் படிப்பு ஒன்றும் தேவையில்லை என்று சொன்னதனை வெளியில தப்பாக நினைத்துவிட்டாங்க. நான் பிக்பாஸில் சொன்னது உங்களுக்கு படிக்க கஷ்டமாக இருந்தால் அதைப் பண்ண வேண்டாம் என்று சொன்னேனே தவிர படிப்பு தேவையே இல்ல என்று நான் சொல்லேல." என்று விளக்கம் கொடுத்தார். இந்த வீடியோ தற்பொழுது யூடியூபில் வைரலாகி பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement