பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே சிறப்பான இடம் பிடித்தவரும், செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின்னர் சினிமா, யூடியூப் வாயிலாக பலரது மனதையும் வென்றவருமான அனிதா சம்பத், தற்போது தனது மாமியார் இறந்த துயரச் செய்தியால் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.
சமூக வலைத்தளங்களில், கடந்த சில நாட்களாக அனிதாவின் மாமியாரின் உடல்நிலை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு தற்போது அனிதா நேரடியாக பதிலளித்து ரசிகர்களை உருக வைத்துள்ளார்.
அனிதா தனது மாமியார் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து, கண்களில் கண்ணீர் சிந்தச் செய்த விதம் ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது. “எல்லாரும் கேட்டிருந்தீங்க… என் மாமியார் எப்புடி இருக்காங்கன்னு." என் மாமியார் இப்ப இறந்திட்டாங்க அவங்க இப்ப இல்ல. இந்த சோகமான விஷயத்தை சொல்லியே ஆகணும் என்று அனிதா சம்பத் ஒரு சில விடயங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, "மாமியாருக்கு ஆரம்பத்தில் சிறுநீரக செயலிழப்பு பிரச்சனை இருந்தது. இதற்கு சிகிச்சை கொடுத்து நல்லா இருந்தாங்க. இதனை அடுத்து அவங்களுக்கு காலில நரம்படைப்பு ஏற்பட்டிருந்து, அதையும் சரி பண்ணோம். பிறகு வீட்டுக்கு வந்து நல்லா தான் இருந்தாங்க." என்றார்.
மேலும், "உடல்நலக் குறைவு அதிகமாகி மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். பின் சீக்கிரம் குணமாகிடுவாங்க என்று நினைத்தோம். இந்த situation-ல கணவர் பிரபா help full-ஆ இருந்தார். 12 நாட்கள் hospital-லில இருந்த பின் இறந்துவிட்டாங்க. அவங்களின் உடல்நிலை குறித்து கேட்ட அனைவருக்கும் நன்றி." என்றார் அனிதா. இந்தக் கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி ரசிகர்களை உலுக்கியுள்ளது.
Listen News!