• Oct 08 2024

பிக் பாஸில் இதனால் தான் தோற்கடிக்கப்பட்டேன்! பல வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த விக்ரமன்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது. ஏனைய சேனல்களில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை விட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் உள்ளதோடு டிஆர்பி ரேட்டிங்கிலும் உச்சத்தில் காணப்படும் ஷோவாக இது காணப்படுகிறது.

இதுவரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவர் சனி, ஞாயிறுகளில் தொகுத்து வழங்கும் காட்சிகளை பார்ப்பதற்காகவே போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள்.

இந்த காரணத்தினால் வார இறுதி நாட்களில் போட்டியாளர்களுக்கும் சிறிது அச்சம் காணப்படும். அதேபோல தப்பு செய்தவர்களை குறும்படம் காட்டியே கதற விடுவதில் வல்லவராக காணப்பட்டார் கமலஹாசன். எனினும் தற்போது எட்டாவது சீசன் ஆரம்பிக்கும் நிலையில், இதிலிருந்து விலகி இருந்தார். அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக களம் இறங்கி உள்ளார்.


இந்த நிலையில், பிக் பாஸ் ஆறாவது சீசனில் பங்கு பற்றிய  விக்ரமன் வழங்கிய பேட்டி ஒன்றில் தான் வெற்றி பெறக் கூடாது என்று பல பிஆர் டீம் தனக்கு எதிராக வேலை செய்தது என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, பிக் பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் விக்ரமன். இவர் இறுதியில் வெற்றி வாகை சூடுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அந்த சீசனில் பங்கு பற்றிய அசிம் தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

தற்போது விக்ரமன் வழங்கிய பேட்டியில், தான் வெற்றி பெறக் கூடாது என்று பலர் பிஆர் டீம் வேலை செய்ததாகவும் அது அசீமுடைய ஆட்கள் இல்லை. ஆனால் தனது கொள்கைக்கு எதிராக தனது அரசியல் வாழ்க்கைக்கு எதிராக செயல்பட்டவர்கள் தான்  நான் வெற்றி பெற்றால் எனது கொள்கையும் வெற்றி பெறும் என்பதால் தன்னை வேணும் என்றே சதி செய்து தோற்கடித்ததாக தற்போது புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

Advertisement