• Jan 18 2025

ரஜனி சார் கிட்ட இத கற்றுக்கொள்ளனும்! அதுக்காக பீல் பண்ணியிருக்கேன்! இருதிச்சுற்று-ரித்திகா சிங் பேட்டி...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

'இருதிச்சுற்று ' படத்தின் மூலம் அறிமுகமான ரித்திகா சிங், தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்துவருகிறார்.


பல முன்னணி நச்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த திரைப்படமானது ஒக்டோபர் 10ம் திகதி ரிலீசாகஉள்ள நிலையில் அதற்கான ப்ரமோஷன் வேலைகள் நடந்துவருகிறது. தற்போது ரித்திகா சிங் ஒரு பேட்டி நிகழ்ச்சியில் தனது வேட்டையன் திரைப்பட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 


எனக்கு தமிழ் பிடிச்சி இருக்கு அவ்வளவா தெரியாது ஆனா ட்ரை பண்ணுறேன். எனக்கு எப்போவும் துறுதுறுனு இருக்கது தான் பிடிக்கும். சூட் எனக்கு இல்ல என்றாலும் நான் செட்ல இருந்து மத்த நடிகர்கள் நடிக்கிறத பார்ப்பேன், கற்றுகொள்ளுவேன். எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்து பின்னர் தள்ளிப்போயுள்ளது. அதுக்காக பீல் பண்ணிருக்கேன்.  


வேட்டையன் படத்தில் நடிக்கும் போது தலைவரிடத்தில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தன்மையான ஒருவர் ஆடம்பரம் இல்லாதவர். அவரை சுத்தி 15 பேர் பாதுகாப்புக்கு இருப்பாங்க ஆனா அவர் சிம்பலா எல்லாரோடையும் பேசுவாரு போட்டோ எடுத்துப்பாரு. அவ்வளோ ரசிகர்கள் இருக்காங்க கொஞ்சம் கூட அவர் முகம் சுளிக்க வில்லை என்று பேட்டியில் கூறியுள்ளார் 

Advertisement

Advertisement