• Jan 18 2025

மணிக்கு அடுத்து நிஷாவா? விஜய் டிவியை விட்டு வெளியேறிய அறந்தாங்கி நிஷா! நடந்தது என்ன?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த பிரியங்கா vs மணிமேகலை சண்டை எல்லோருக்கும் தெரிந்தது தான். விஜய் டிவியில் இருக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா என மக்கள் எல்லோரும் ஆச்சர்யமாக இதை பார்த்தார்கள்.


தொடர்ந்து பல பிரபலங்களும் இன்னும் இதுகுறித்து பேசிவருகிறார்கள். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் இருந்து அறந்தாங்கி நிஷா சமீபத்தில் வெளியேறிவிட்டார் என ஒரு  தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு என்ன நடந்தது என்று மீண்டும் குடைய ஆரம்பித்துள்ளனர். 


இது பற்றி அறந்தாங்கி நிஷா விளக்கம் கொடுத்து பதிவிட்டு இருக்கிறார. இது உண்மை அல்ல வதந்தி என தெரிவித்துள்ளார். "யாரு பார்த்த வேலை சாமி இது, ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தேன் டா உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்டு இருக்கீங்க" என அவர் கூறி இருக்கிறார்.  இதனால் இது உண்மையான தகவல் இல்லை என்பதை நிஷா உறுதி செய்துள்ளார்.

.  

Advertisement

Advertisement