• Jul 17 2025

சினிமால வாய்ப்பு கிடைக்க இதுதான் காரணம்..! சாய் அபயங்கர் ஓபன்டாக்.!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நாளும் புதிய முகங்கள் மற்றும் புதிய விமர்சனங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அதில் சமீப காலமாக ஒலிக்கத் தொடங்கிய ஒரு வித்தியாசமான இளம் இசையமைப்பாளர் தான் சாய் அபயங்கர்.


'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் இவரது இசை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. ஆனால், இவருக்கு வாய்ப்பு வந்ததற்கு காரணம் "அரசியல், சினிமா தொடர்புகள்" தான் என்கிற விமர்சனங்களும் பரவத் தொடங்கின. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சாய் அபயங்கர் நேரடியாக பதிலளித்துள்ளார்.

"எனக்கு இருக்கும் influence-னால எனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு வரல. எனக்கு இருக்கும் தொடர்பு மூலமாக தான் வாய்ப்பு வருது. "கட்சி சேர.." பாட்டு மூலமாக தான் எனக்கு பென்ஸ் பட வாய்ப்பு கிடைத்தது. அப்புடியே என்னோட  இசை சினிமா துறையில் பரவ ஆரம்பிச்சது. அது மூலமாக தான் எனக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்தது." எனக் கூறியிருந்தார். 


தற்போது சாய் அபயங்கர் இரண்டு புதிய படங்களுக்கு இசை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒன்று காதல் தழுவலுடன் கூடிய கதையாகவும், மற்றொன்று சஸ்பென்ஸ் திரைப்படமாகவும் இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement