புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட நடிகைகளில் ஒருவரே ஜெனிலியா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். குறிப்பாக இயக்குநர் சங்கர் தனது 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் வாயிலாக ஜெனிலியாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். அதிலும் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் அவர் ஈர்த்திருந்தார்.
ஜெனிலியாவின் நிஜப் பெயர் ஹரிணி. இவர் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி 1987 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மும்பை என்னும் இடத்தில் பிறந்தவர். இவர் திரைப்பின்னணியைக் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் இல்லாவிடினும் தன்னுடைய சிறந்த நடிப்பினால் பிலிம்பேர் விருதுகள், நந்தி விருதுகள் எனப் பல விருதுகளையும் வென்றெடுத்துகின்றார்.
பொதுவாகவே திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் பாலிவுட்டில் பல திருமணங்கள் திரைப்படங்களில் வேலை செய்யும்போது நிச்சயிக்கப்படும் வகையில் அமைந்திருக்கின்றன. அதேபோல் தான் ஜெனிலியாவின் திருமண வாழ்க்கைக்கு வித்திட்டதும் இந்த பாலிவுட் சினிமா தான்.
அதாவது பாலிவுட்டின் இளைய ஜோடிகளான ரித்திஷ் மற்றும் ஜெனிலியா இருவருக்கும்இடையில் பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான காதல் கதை உள்ளது. நல் வாழ்க்கைக்கு உதாரணமாகக் கூறும் வகையில் ரித்தீஷ் மற்றும் ஜெனிலியா இருவரும் தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை இன்றுவரைசேர்ந்து வாழ்கின்றனர்.
இவர்கள் இருவரும் 2012 ஆம் ஆண்டு தான் ஒருவரை ஒருவர் சந்தித்திருக்கின்றனர். மகாராஷ்ட்ராவில் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞனே ரித்திஷ். இவரை சந்தித்த போது ஜெனிலியாவிற்கு வயது 16 தானாம். இவர்கள் மகாராஷ்ட்ரா விமான நிலையத்தில் சந்தித்திருந்தனர்.
அந்த சமயத்தில் ரித்திஷ் தேஷ்முக் சாதரண நடிகர் மட்டும் இல்லையாம். அவர் அப்போதைய மகாராஷ்ட்டிர முதலமைச்சரான ஶ்ரீ விலாஸ் ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார். இதனால் ஆரம்பத்தில் ரித்திஷ் ஒரு முதலமைச்சரின் மகன் என்பதால் அவர் மிகவும் மோசமான நபராக இருக்க கூடும் என ஜெனிலியா தவறாக நினைத்தார்.
இதனால் இவரை முதல் முறை சந்திக்கும் போதே ஜெனிலியாவிற்கு அது ஒரு மோசமான அனுபவமாக அமைந்திருக்கின்றது. அதாவது அவரது முதல் படமான 'துஜே மேரி கசமின்' திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்கிற்கான முதல் சந்திப்பின் போது அவர்கள் இருவரும் சந்தித்து கொண்டிருக்கின்றார்கள்.
அப்போது ஜெனிலியா ரித்திஷ்க்கு கை கொடுக்கும் போது உடனே தனது முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டிருக்கின்றார் ரித்திஷ். இதனால் அவரை ஜெனிலியாவிற்கு முன்பு பிடிக்கவில்லையாம்.
ஆனால் உண்மையில் ஜெனிலியா நினைத்தது போல ரித்திஷ் மோசமான ஒருவராக இருக்கவில்லை. அவர் சூட்டிங் செட்களில் இருந்த அனைவரிடமும் மிகவும் மரியாதையுடனும் கண்ணியமாகவும் மதிப்புக் கொடுத்து நடந்து கொண்டார்.
அதுமட்டுமல்லாது படப்பிடிப்பின் போது ரித்திஷ் ஜெனிலியாவின் பெற்றோர்களிடம் மிகவும் மரியாதையுடன், நல்ல பையனாக நடந்து கொண்டார். குறிப்பாக முதல்வரின் மகன் என்ற எந்த பகட்டும் இல்லாமல் அவர் மிகவும் தாழ்மையாக அவர்களிடம் நடந்து கொண்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் செட்களில் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாக ஆகினர். அவர்களுக்குள் இனம் புரியாத ஒரு பாசம் வளர்ந்தது. ஆனால் அப்போது அது காதல் என இவர்கள் இருவரும் நினைத்திருக்கவில்லை. ஹைதராபாத்தில் அவர்களது படப்பிடிப்பு முடிந்த பிறகு ரித்திஷ் மீண்டும் மும்பைக்கு வந்து சேர்ந்தார்.
ஆனால் படப்பிடிப்புகள் யாவும் முடிந்தும் ரித்திஷ் ஜெனிலியா நியாபகமாகவே இருந்தார். அவரால் ஜெனிலியாவை கொஞ்சமும் மறக்க முடியவில்லை. ஜெனிலியாவும் ரித்திஷை மிகவும் ஆழமாக நேசித்தார். அவர்கள் இருவரும் தங்களை அறியாமலே ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
படிப்படியாக வளர்ந்த அவர்களது காதல் ஒன்பது ஆண்டுக்காலம் வரை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் நீடித்தது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 03, 2012 அன்று அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். திருமண பந்தத்தில் இணைந்த இவர்கள் இருவரும் இன்றும் அற்புதமான ஜோடிகளாகவே உள்ளனர்.
அதுமட்டுமல்லாது தற்போது அவர்கள் சிறந்த பெற்றோர்களாகவும் உள்ளனர். அதாவது அவர்கள் திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று எடுத்தனர். மூத்த குழந்தையான ரியான் 25, நவம்பர் 2014 அன்று பிறந்தார். இளைய குழந்தையான ரஹூல் 01 ஜூன் 2016 அன்று பிறந்தார்.
இந்தத் தம்பதியினர் எப்போதும் தங்களது குழந்தைகளுடனே அதிகளவில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் இன்றுவரை இவர்களுக்குள் எந்த ஒரு பிரிவுமே இல்லாத அளவிற்கு அனைவரும் வியக்கும் படி அவர்கள் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
Listen News!