• Jan 18 2025

மரணம் வரை சென்று தப்பிய வாணி ராணி சீரியல் நடிகர் வேணு அரவிந்த் - இதுவரை யாரும் அறிந்திடாத புதிய விடயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து பிரபல்யமானவர் தான் வேணு அரவிந்த். இவர் சில மாதங்களுக்கு முதல் உடல் நலக்குறைவு காரணமாக கோமாவுக்குள் போய்விட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.இதனை அடுத்து தற்பொழுது குணமடைந்திருக்கின்றார். இந்த நிலையில் வேணு அரவிந்த் குறித்த விடயங்களைப் பார்ப்போம்.

அதாவது வேணு அரவிந்த் இவர் 1965 நவம்பர் 9ம் திகதி பிறந்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து 1985 இல் தான் தன்னுடைய சினிமா கெரியரை ஆரம்பித்தாராம்.இவருக்கு 4 சகோதர்கள் இருக்கின்றார்களாம்.அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் தான் இருக்கின்றார்களாம்.

இவரது உடல் சரிஇல்லாத நேரத்தில் அவர்கள் இவருக்கு உதவிகளையும் புரிந்து வந்துள்ளார்களாம். 1987ம் ஆண்டு சோபா என்பவரைத் திருமணம் செய்து கொண்டாராம். இவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றார்களாம். இவர்கள் இருவரும் தமது கெரியரில் பிஸியாக இருந்து வருகின்றார்களாம்.


இதனால் இவருடைய இன்ப துன்பங்களில் மனைவி ஷோபா தான் துணையாக இருந்து வருகின்றாராம். மேலும் இவர் ஆரம்பத்தில் அலைகள் என்ற ஒரு சீரியலில் ரங்கா என்னும் மோசமான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாராம்.இவரைத் தொடர்ந்து தான் பலர் வில்லன் ரோல்களில் நடித்துள்ளாராம்.

இது தவிர 2001ம் ஆண்டு வெளிவந்த சபாஷ் சரியான போட்டி என்ற படத்தை இயக்கி உள்ளாராம்.1994 ஆம் ஆண்டு வெளியான மேமாதம் என்னும் திரைப்படத்தில் நடிகர் வினித்திற்கு டப்பிங் பேசினாராம். அதே போல அண்மையில் ஹரிஸ் கல்யாண நடிப்பில் வெளியான ஓ மணப் பெண்ணே திரைப்படத்திலும் நடித்திருந்தாராம்.

முதல் முதலாக தொலைக்காட்சி பிரபலங்களில் கலை மாமணி பட்டத்தை பெற்றவராகவும் இருக்கின்றார். அத்தோடு இவர் வாணிராணி சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாராம்.இதனைத் தொடர்ந்தும் பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கின்றாராம்.


இப்படி கெரியரில் பிஸியாக போய்க் கொண்டிருக்கும் போது தான் இவருடைய மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அதிலிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் நோயிலிருந்து பூரணமாக குணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் விரைவில் சீரியலில் இவர் நடிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement