தமிழில் வெளியான அம்புலி, கதம் கதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்தான் நடிகை சனம் ஷெட்டி. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
தற்போது விளம்பர மாடலாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சனம் செட்டி பங்கெடுத்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் சமூகத்தில் நடைபெறும் சீர்கேடுகளுக்கு குரல் எழுப்பும் ஒரு தைரியமிக்க பெண்ணாகவும் சனம் செட்டி காணப்படுகின்றார்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் கலந்து கொண்டுள்ள மஞ்சரியை ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதி அசட்டைத் தனமாக நடத்துவதாகவும், கருப்பு கலர் கண்ணாடி போட்டால் விஜய் சேதுபதிக்கு கண் தெரியாது போல எனவும் விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
d_i_a
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கு பற்றிய சனம் செட்டி தொடர்ச்சியாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி விமர்சித்து வருகின்றார். அண்மையில் சௌந்தர்யா பிஆர் வைத்திருப்பதாகவும் அதிரடி கருத்தொன்றை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சனம் ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் புஷ்பா 2 பட பாடலுக்கு குட்டை பாவாடை, பிளவுஸில் குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ஒரு சிலர் அவரது நடனத்தை பார்த்து லைக்குகளை குவித்து வந்தாலும், இன்னும் சிலர் ஊருக்குத்தான் உபதேசமா? என சனம் ஷெட்டியின் ஆடையை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றார்கள்
Listen News!