• Apr 03 2025

'தலைவர் 171' படத்தின் தலைப்பு ரிலீஸானது..! இது விஜய்க்கு கொடுக்கும் பதிலடியா? ரஜினியின் தரமான சம்பவம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் தான்  லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பையும் வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனையும் படைத்தது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ்,  கமல் நடிப்பில் விக்ரம் மற்றும் கார்த்திக் நடிப்பில் கைதி ஆகிய படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தார்.

இவ்வாறு கமல், சூர்யா, விக்ரம், கார்த்திக் இவர்களின் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கத் தயாரானார் லோகேஷ்.

அதன்படியே லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு 'தலைவர் 171' என தற்காலிகமாக பெயர் வைக்க பட்டிருந்தது. இது தொடர்பிலான அப்டேட்களும் அடிக்கடி வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்தது.


ஒரு சில நாட்களுக்கு முன்னர் தலைவர் 171 வது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக, அதில் இளமையாக இருக்கும் ரஜினியை பார்த்த ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 171 படத்திற்கான தலைப்பு லீக் ஆகியுள்ளது.


அதாவது, லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்திற்கு 'கழுகு' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். தற்போது இந்த தகவல் படு வைரலாகி வருகின்றது.

இதேவேளை, ஏற்கனவே காக்கா- கழுகு பிரச்சினையில் விஜய், ரஜினியின் பெயர்கள் அடிபட்டதும், அதற்காக அவர்கள் மேடை நிகழ்ச்சிகளில் பேசிக் கொண்டதும் நாம் அறிந்த ஒன்றே. தற்போது ரஜினி படத்திற்கு கழுகு என பெயர் வைக்கப்பட்டமை தொடர்பிலும் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement