• Nov 22 2024

'நான் விதைச்சது.. என் 20 வருட கனவு இவர்' ரொம்பவும் எமோஷனலாக பேசிய ராகவா லாரன்ஸ் வீடியோ

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடித்துவரும் ராகவா லாரன்ஸ், நடிப்பில் மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகள் மூலமும் அதிகம் அறியப்பட்ட ஒரு நபராக காணப்படுகிறார்.

நடிகர், இயக்குனர், கொரியோகிராபர் என பல அவதாரங்களில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாக்களில் பணியாற்றி வருகிறார். மறுபுறம் தான் செய்யும் உதவிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒருவராகவும் காணப்படுகிறார்.

அதன்படி தனது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் உண்மையிலேயே மாற்றுத் திறனாளி  திறமையாளர்களை ஊக்குவிப்பது, நடன பயிற்சி கொடுப்பது, என்று தனது திரை மறைவிலும் பலரை படிக்க வைத்து உதவிகள் புரிந்து வருகின்றார்.

இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ், சிறு வயது முதல் 20 ஆண்டுகள் தான் படிக்க வைத்து வளர்த்த இளைஞர் டிகிரி படித்து முடித்து, அவரும் குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதை பற்றி நெகிழ்ச்சியுடன் கூறி அறிமுகப்படுத்தியுள்ளார்.


அதாவது, புதுக்கோட்டையை சேர்ந்த சிவ சக்தியின் கதை இது. அவருக்கு நான்கு வயதாக இருந்தபோது அவருடைய தாய் எங்களிடம் உதவி கேட்டு வந்தார். அவர்களின் தந்தை குடும்பத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். சிவ சக்தியையும் அவரது சகோதரியையும் கவனித்துக் கொள்ள வேண்டியது அவரது தாய்தான். அவர்கள் இருவரும் என் வீட்டில் வளர்ந்தவர்கள். எனது ஆதரவுடன் சிவசக்தி கணிதத்தில் பிஎஸ்சி முடித்துவிட்டு தனியார் ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிகிறார். இன்ஸ்பெக்டராக வேண்டும் என்று தனது கனவை நோக்கி அவர் உழைத்துக் கொண்டுள்ளார் என தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.


மேலும் அவர் வீடியோவில் கூறுகையில், 20 ஆண்டுகால கனவு இன்று நனவாகியது. சின்ன வயசில் இவர் குட்டியா என்னிடம் ஓடி வந்தார். நான் போட்ட விதை இப்போது மரமாக இருக்கிறது. இந்த இரண்டு குழந்தைகள் தொடங்கி அப்படியே 60 குழந்தைகள் வரை வளர்ந்து வரிசையாக எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுக்கு வீட்டை கொடுத்துவிட்டு நானும் எனது மனைவியும் வாடகைக்கு சென்று விட்டோம். போகும் போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் இவர்கள் வளர்ந்து வரும் போது அந்த கஷ்டம் எல்லாம் போய்விடும். இதே மாதிரி ஒரு ராகவா லாரன்ஸ் சிவா வழியாக சேவை செய்ய வருகிறார் என எமோஷனலாக பேசி உள்ளார்.


Advertisement

Advertisement