• Jan 18 2025

மீனா மேல இப்படியொரு திருட்டு பழிய போட்டுட்டாங்களே..! துடிதுடித்த முத்து.. விஜயா செய்த காரியம்!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில்,  விஜயா திட்டியதை நினைத்து ரோகிணி, இனிமேல் மனோஜ் என் பேச்சை கேட்கிற மாதிரி பண்ணனும் என்று சொல்ல, வித்யாவும் மனோஜ்ஜ உன்கூட தனிக்குடித்தனம் கூட்டிட்டு போயிடு என்று சொல்லுகிறார்.

இன்னொரு பக்கம் முத்துவையும் அண்ணாமலையையும் அவமானப்படுத்தி வம்புக்கு இழுப்பதற்காக அவர்கள் இருவரையும் சாப்பிட கூப்பிட்டு உட்கார வைக்கிறார்கள். அண்ணாமலை அவமானப்படுவதை பார்க்க வாசுதேவனும்  அவரது மனைவியும் டைனிங் ஃஹாலில் வர, அங்கு முத்துவும், அண்ணாமலையும் சாப்பிடாமல் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கு குழந்தைகள் சாப்பிட வந்துட்டாங்க அதனால நாங்க எழுந்து விட்டதாக சொல்ல, வாசுதேவனின் மனைவி குழந்தைகளை எந்திரிக்கச் சொல்கிறார். அண்ணாமலை முதலில் அவங்க சாப்பிடட்டும் என்று சொல்ல, அந்த பிளானும் சொதப்பல் ஆகிறது.


அதன் பிறகு ஸ்ருதி, ரோகினிக்கு ஆர்த்தி எடுக்கின்றார்கள். ஸ்ருதி அதன் பின் நகைகளை கழட்டி வைத்துவிட்டு ரவியுடன் வெளியே செல்கிறார். அதன் போது அவர் கழட்டிய மாலையில் செயின் ஒன்று சிக்கிக் கொண்டிருக்கிறது.

இதன்போது பார்வதி மீனாவை கூப்பிட்டு நீ போய் ஸ்ருதியை கூட்டிட்டு வா உன் மாமியார் எல்லாரும் ஒன்னா சேர்ந்து கோவிலுக்கு போகணும்னு சொல்லிட்டு இருக்கா என்று சொல்ல, மீனாவும் ஸ்ருதியை கூப்பிட அவரது ரூமுக்கு போகிறார். அங்கே அவர் கழட்டி போட்ட மாலையில் செயின் மாட்டிக்கொண்டிருப்பதை பார்த்து அதை எடுத்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் வாசுதேவன் அங்கு வந்து மீனா நகையை திருடுவதாக பழி போடுகிறார்.

உடனே  தனது மனைவியை கூட்டி வந்த வாசுதேவன்,  மீனா திருடுவதாக சொல்ல அவரும் சேர்ந்து மீனாவை திருடி என அவமானப்படுத்துகிறார்கள். விஜயாவையும் கூப்பிட்டு மீனா நகையை திருடியதாக சொல்ல, அவர் பதில் பேச முடியாமல் நிற்கிறார்.

இதை தொடர்ந்து மீனா அழுது கொண்டே அங்கிருந்து ஓடிச் சென்று முத்துவை  கட்டிப்பிடித்துக் கொள்ள, அவர் என்ன நடந்துச்சுன்னு கேட்கிறார். வாசுதேவனும் அவருடைய மனைவியும் மீனா நகைகளை திருடியதாக சொல்ல, அண்ணாமலை என் மருமகள் அப்படி பண்ணுற ஆள் கிடையாது என மீனாவுக்கு ஆதரவாக பேசுகிறார்.

முத்துவும் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க என்று பொறுமையாக பேச, அவர்கள் மீனா திருடியதை நாங்களும் பார்த்தோம் என திரும்பவும்  சொல்கிறார்கள். இதனால் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதுதான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.


Advertisement

Advertisement