• Jan 21 2025

அவதார் 3 படத்தின் தலைப்பே அதிரடியா இருக்கே..! ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

டைட்டானிக் திரைப்படத்தை இயக்கியவர் தான் ஜேம்ஸ் கேமரூன். இந்த திரைப்படம் உலகத்திலேயே அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. அதன் பின் ஏலியன், தி டெர்மினேட்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார்.

அதன்பின்பு ஜேம்ஸ் கேமரூன் அடுத்து இயக்கிய அவதார் திரைப்படம் டைட்டானிக் திரைப்படத்தின் வசூலையும் முறையடித்தது. உலகமெங்கும் பலமொழிகளில் வெளியான இந்த திரைப்படம் பல ஆயிரம் கோடி வசூலை பெற்றது. இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு புது உலகை அறிமுகம் செய்திருந்தது.

2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் புது அனுபவத்தை கொடுத்ததோடு இந்த படம் வெளியாகி சில வருடங்களில் 3டியிலும்  நல்ல வசூலை பெற்றது. இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்ததனால் இன்னும் ஐந்து பாகங்கள் வரை வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.

அதன்படி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து 2022 ஆம் ஆண்டு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகம் நிலத்தோடு தொடர்புடையது என்றால் இரண்டாவது பாகம் நீரோடு தொடர்புடையதாக காணப்பட்டது. அந்தப் படத்தின் தலைப்பு Avatr – They way of water என வைக்கப்பட்டிருந்தது.


படத்தின் தலைப்பு போலவே பல காட்சிகளும் தண்ணீரில் எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படமும் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வைரவேற்பை பெற்றது. அதன் பின்பு இதன் மூன்றாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள்.

இந்த நிலையில், அவதார் படத்தின் மூன்றாவது பாகம் தொடர்பான அறிவிப்பை ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்திற்கு  AVATAR – FIRE AND ASH என் தலைப்பு இட்டு உள்ளார்கள்.

அதாவது அவதார் - நெருப்பும் சாம்பலும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement