• Sep 09 2024

"ஓ ராயா .." தனுஷ் குரலில் வெளியான பாடல்..! உருகும் இசையில் இசைப்புயல்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

பா.பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கிய திரைப்படம் தான் ராயன் திரைப்படம். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்திருந்தார் தனுஷ்.

கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியான ராயன் திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இந்த படம் வெளியான முதல் வாரத்திலேயே 100 கோடி ரூபா வசூலை அள்ளி இருந்தது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.


தனுஷ் இயக்கிய ராயன் திரைப்படம் வெகுவாக பாராட்டப்பட்டாலும் அதில் ஏ. ஆர் ரகுமானின் இசையும் பலரையும் ஈர்த்தது. குறிப்பாக அந்த திரைப்படத்தில் 'ஓ ராஜயா..;' என்ற பாடலை ஏ.ஆர் ரகுமான் பாடியிருந்தார்.

இந்த நிலையில். இசைப்புயல் ரஹ்மானுக்கு நன்றி கூறி  தனுஷ் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோவில், இசைப்புயல் ஓ ராயா பாடலை பியானாவில் வாசிக்க அவர் அருகில் நின்று அந்தப் பாடலை பாடியுள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement