• Sep 07 2024

இந்தியன் 2ன் எதிரொலி.. இந்தியன் 3க்கு வந்த புதிய சிக்கல்! வெளியான புதிய தகவல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். இதன் காரணத்தினாலே இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளானது.

ஜூலை 12-ம் தேதி உலக அளவில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இந்த படத்திற்காக இந்தியாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் இதற்கான ப்ரொமோஷன்கள் நடைபெற்றது.

எனினும் இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடும் எரிச்சலுக்கு உள்ளாகினர்.. ஷங்கரின் திரைப்படம் என்பதாலும் கமலஹாசனின் திரைப்படம் என்பதாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் போன ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியன் 2 திரைப்படம்.

தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியான போதும் அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அந்த காட்சிகளை எடுத்து இணையத்தில் வெளியிட்டதோடு, இன்றளவு மட்டும் நெட்டிசன்கள் அந்த படத்தை விமர்சித்து வருகின்றார்கள்.


இந்த நிலையில் இந்தியன் படத்தின் மூன்றாவது பாகம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை. இதன் காரணத்தினால் இந்தியன் 3 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் கசிந்து  உள்ளன.

சங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு வெளியாக உள்ளது. அத்துடன் கமல் நடித்த தக்லைப் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியன் 3 திரைப்படத்தில் சில எடிட் செய்து அடுத்த ஆண்டு கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement