மலையாள சினிமாவின் மிகப்பெரிய பிரம்மாண்டத்துடன் உருவாகிய ‘L2 எம்புரான்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் தீவிர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் மோகன்லால் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய த்ரில்லர் மற்றும் ஆக்சன் கதையைக் கொண்டமைந்திருந்தது.
மலையாள சினிமாவின் மாபெரும் வெற்றிப் படமான ‘லூசிபர்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றதோடு, பாகம் 2 குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்திருந்தது. இந்நிலையில், தற்போது ‘L2 எம்புரான்’ படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இயக்குநராகவும், நடிகராகவும் பிரித்விராஜ் சுகுமாரன் இணைந்துள்ளார். மேலும், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், அபிமன்யு சிங், சாய் குமார் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த ‘L2 எம்புரான்’ திரைப்படம், வருகின்ற ஜூலை 27ம் திகதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கின்றது. இதனை முன்னிட்டு, படக்குழு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.
Listen News!