சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜையும் சாப்பிட கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம் என்று அண்ணாமலை கேக்கிறார். அதுக்கு ரவி அவன் ரோகிணியோட தான் சாப்பிடுவான் என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் பாக்க மனோஜ் முதல் ஆளாப் போய் சாப்பிட்டுக் கொண்டிருக்கான். அதைப்பாத்து முத்து ஷாக் ஆகுறான்.பிறகு எல்லாரும் ஒன்னாச் சேர்ந்திருந்து சாப்பிடுகிறார்கள். பிறகு மீனா டெகரேஷன் எல்லாம் நல்லா இருக்கு என்று கதைச்சுக் கொண்டிருக்காள்.
அதைத் தொடர்ந்து ஸ்ருதி விஜயாவோட சாரி சூப்பரா இருக்கு ஒரு போட்டோ எடுத்துக்கவா என்று கேக்கிறாள். அதைப் பாத்த ரோகிணி என்ன ஆன்டி தனியா போட்டோஷூட் நடக்குது என்று சொல்லுறாள். பின் எல்லா மருமகளும் ஒன்னா சேர்ந்து போட்டோ எடுக்கிறார்கள். இதைப் பார்த்த மீனா தனியா நின்று கவலப்படுறாள்.
பின் விஜயா எல்லாரோடையும் ஒன்னா இருந்து சந்தோசமா சாப்பிடுறதப் பாத்து முத்து ஷாக் ஆகுறான்.பிறகு பரசு அங்கிள் மாப்பிள்ளயோட தாய் மாமனக் காணேல என்று தேடுறார். இதைத் தொடர்ந்து மீனாவுக்கு முத்து சாப்பாடு ஊட்டி விடுறதப் பாத்து மனோஜ் தானும் ஊட்டிவிடுவேன் என்று சொல்லிட்டு ரோகிணிக்கு ஊட்டுறான்.
அப்புடியே எல்லாரும் சந்தோசமா இருக்கிறார்கள். பிறகு மாப்பிள்ளயோட தாய்மாமன அண்ணாமலை பாக்கோனும் என்று சொல்லுறார். அதுக்குப் பரசு அங்கிள் சமையல்காரனுக்கு உடம்பு சரியில்ல அதால அவரே சமைக்கிறார் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!