• Mar 21 2025

சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை முடித்த விக்கிரம்..! வெளியாகவிருக்கும் மாஸ்டர் பீஸ் படம்!

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த விக்கிரம், தனது அடுத்த படமான ‘வீரதீரசூரன்’ படப்பிடிப்பை சத்தமே இல்லாமல் முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தப் படத்தை ‘சித்தா’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ளார். அவரது படங்களில் எப்பொழுதும் கதைகள் தனித்துவம் வாய்ந்ததாகவும் விறுவிறுப்பானதாகவும் காணப்படும்  என்பது அனைவரும் அறிந்த விடயம். அந்தவகையில் , ‘வீரதீரசூரன்’ படத்தில் விக்கிரம் மீண்டும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரமின் படங்கள் என்றாலே ஆக்சன், திரில்லர் மற்றும் அதிரடி எனப்பல தரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் காணப்படும். அதில், ‘வீரதீரசூரன்’ படம் விக்கிரமின் முன்னைய படங்களை விட முற்றிலும் மாறுபட்ட கதையைக் கொண்டதாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement